டேல் கேலோவேய் (Dale Galloway) என்பவர் தாம் எழுதிய புத்தகத்தில், ஒரு
சம்பவத்தை எழுதியிருந்தார். ஒரு நாள் அவர் ஆலயத்தில் ஏதோ வேலை செய்து
கொண்டிருந்தபோது அந்த பெரிய ஆலயத்தின் ஒரு திறந்த ஜன்னல் வழியாக ஒரு சிறு
பறவை உள்ளே வந்தது. ஆலயத்தின் குறுக்கும் நெடுக்குமாக அந்த பறவை பறந்து
திரிந்தது. பின்னர், சற்று நேரம் கழித்து, அது வெளியே போக முயற்சித்தது. அதற்காக அது சுற்றிலும் பறந்து வெளியே போகும் வழியை தேடியது. சற்று தாழ்வாக வந்துபோது, அந்த சகோதரன் அதை பிடிக்க முயற்சித்தார். ஆனால் அது மீண்டும் உயரே எழும்பி பறக்க ஆரம்பித்தது.
அவர் அந்த பறவை பறந்த இடத்திற்கெல்லாம், கூடவே சென்றார். ஆனால் அந்த பறவை அவர் கைகளில் சிக்காமல், தானே வெளியே போக வழியை தேடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரு வர்ணமிட்ட கண்ணாடி ஜன்னலில், அதுதான் வெளியே போகும் வழி என்று நினைத்து, அங்கு போய் மேலே வேகமாக மோதியபோது, அடிபட்டு கீழே விழுந்தது. அப்போது அதை கையில் எடுத்த அந்த சகோதரன், ‘நீ மட்டும் என்னை அனுமதித்திருந்தால், நான் எப்போதோ உன்னை விடுவித்திருப்பேன். ஆனால், நீயோ என் கையில் வராமல், உன் இஷ்டத்திற்கு பறந்து சென்றாய், கடைசியில் இதோ அடிபட்டு கீழே விழுந்து இப்போது என் கையில் கிடைத்திருக்கிறாய்’ எனக் கூறி ஜன்னலை திறந்து அதை வெளியே விட்டார். அது தன் செட்டைகளை அடித்து, விடுதலையோடு பறந்து சென்றது.
அப்போது அவர் சில வருடங்களுக்கு முன், தான் எப்படி உடைந்து போனவராக, குழப்பம் நிறைந்தவராக, என்ன செய்வது எங்கே செல்வது என்று திகைத்திருந்த வேளையில் கர்த்தரின் கரத்தில் விழுந்தபோது, அவர் அவருடைய இருதயத்தின் புண்களை காயம் கட்டி, அவரை பாவத்திலிருந்து விடுதலையாக்கி, அவர் அறியாத உயரத்தில் கொண்டுபோய் விட்ட தயவை நினைத்து கர்த்தரை துதிக்க ஆரம்பித்தார்.
No comments:
Post a Comment